[நேரலை] 21-06-2019 மாபெரும் ஆர்ப்பாட்டம் –சென்னை | கி.வெங்கட்ராமன் Seeman Speech Nuclear Dump
Contact us to Add Your Business
அறிவிப்பு: சூன்-21, கூடங்குளத்தில் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைப்பதைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – வள்ளுவர் கோட்டம்(சென்னை)
தமிழக மக்களுக்கும், மண்ணிற்கும் பெரும் தீங்காக அமைந்திருக்கின்ற கூடங்குளம் அணு மின் நிலையத்தையே முற்று முழுதாக மூடக்கோரி பல ஆண்டுகளாக நாம் போராடிக்கொண்டிருக்கிற நிலையில், பல ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் வீரியம் குறையாத கதிர்வீச்சுகளை வெளிப்படுத்தக்கூடிய அணுக்கழிவுகளை, கூடங்குளம் அணுஉலை அருகாமையிலேயே மண்ணில் புதைத்து வைத்து சேமிக்கும் திட்டம் என்பது மானுடச் சமுகத்திற்கு மட்டுமில்லாது இம்மண்ணில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் பேரழிவை விளைவிக்கக்கூடியது.
ஏற்கனவே அழிந்து வருகிற தமிழர் நிலத்தை ஒட்டுமொத்தமாக அழிக்கும் நோக்கில் கூடங்குளத்தில் அணுக்கழிவு சேமிப்பு மையத்தை அமைக்க முற்படும் மத்திய-மாநில அரசுகளைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சார்பில், தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர் ஐயா கி.வெங்கட்ராமன் அவர்களின் தலைமையில் எதிர்வரும் 21-06-2019 வெள்ளிக்கிழமை பிற்பகல் 03 மணியளவில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது.
இதில் ஆதித்தமிழர் விடுதலை இயக்கம் சார்பில் அ.வினோத், தமிழர் தேசிய விடுதலைக் கழகம் சார்பில் ஆ.கி.சோசப் கென்னடி, தமிழர் நலப் பேரியக்கம் சார்பில் மு.களஞ்சியம், மருது மக்கள் இயக்கம் சார்பில் செ.முத்துப்பாண்டியன் ஆகியோர் கண்டனவுரையாற்றுகிறார்கள். இறுதியாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் கண்டனப்பேருரையாற்றுவார்.
அவ்வயம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த உறவுகளும், நாம் தமிழர் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் பாசறைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும் பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்று அணுக்கழிவு சேமிப்பு மையம் எனும் நாசகாரத் திட்டத்தை தமிழ் மண்ணிலிருந்து விரட்டியடிப்போம்.
இனம் ஒன்றாவோம்! இலக்கை வென்றாவோம்!
—
தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
தகுதி உள்ளவை ஒருநாள் வென்றே தீரும்!!!!!!நாம்தமிழர்!!!
சீமாண் அண்ணன்…உங்களை கெஞ்சி கேட்கிறேன்…நாம் தனி நாடு அடைந்தால் மட்டுமே நமக்கு விடுதலை…
அண்ணன் கல்யாணசுந்தரம் எப்போதும் போலவே ஆகச்சிறந்த உரையாற்றினார்
Vaalga Naam Thamilar
தமிழனுக்கு என்று ஒரு மாபெரும்படை உருவாகிவிட்டது… நாம்தமிழராய்
நாம் தமிழர் காலத்தின் கட்டாயம்
தமிழ் தேசியம் மட்டுமே தமிழக மக்களுக்கு தீர்வு…
காலத்தின் கட்டாயம் தேவை என்பதை நாம் தமிழர் கட்சியின் சார்பில் விளைந்த விருட்சம் விவசாயி
எதிர் கால தலைமுறையின் வாழ்க்கை நாம் தமிழர் கையில் தான்
இருக்கு
நாம் தமிழர் காலத்தின் கட்டாயம்
நாம் நிச்சயம் வெல்வோம் நாம் தமிழர் ????
தமிழா விழித்துவிடு
தூயரம் உன்னைவிடாது
நாம் தமிழர் கட்சி ஆட்சி அமைந்தால் மட்டுமே நிரந்தர தீர்வு…மக்களுக்கு புரிந்தால் சரி
நாம் தமிழர்
நாங்கள் நாணல்கள் அல்ல வளைந்து கொடுப்பதற்கு…
மூங்கில்கள்.
மூங்கில்கள் மலடுகள் அல்ல அழிவதற்கு…
நாம் தமிழர்
காலத்தின் கட்டாயம்
” SEEMAN ” Kaaddu Kaththi Sonnathuthaandaa Nadakkuthu — Viliththelu Tamilaa — NAAM TAMILAR
இவர்களை போன்றவர்கல் பாரளுமன்றம் செல்ல வேண்டும்…
தமிழன்தான் தமிழ்நாட்டை ஆளனும்.
திராவிடம் ஒழிய வேண்டும்.
நாம் தமிழர்..??
My vote is for seeman forever
நாம் தமிழர் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️???????????
நாம் தமிழர் கட்சி இல்லை நம் இனத்தின் அடையாளம் காலலத்தின் கட்டாயம் நிச்சயம் ஒரு நாள் இந்த ஆச்சி அதிகாரம் நாம் தமிழர் கையில் வரும் அப்போது தான் இந்த இனத்தின் விடுதலை
Survival of fittest ??