ஒரு ‘டீ’ மாஸ்டரும், இராணுவச் சிப்பாயும்! – ஒரு ஜப்பானிய கதை | பகுதி – 3 (நிறைவு)
Contact us to Add Your Business
‘வெற்றி’ என்றால், முதலில் நமக்கு நினைவுக்கு வருபவர்கள் ஜப்பானியர்கள்தான்.
ஒரு ஜப்பானிய கதை..
ஒரு ‘டீ’ மாஸ்டரும், ராணுவச் சிப்பாயும் சேர்ந்து போய்க்கொண்டிருந்தார்கள்.
போகும் வழியெல்லாம் சிப்பாய்க்கு நிறைய மரியாதை.
பார்ப்போர் எல்லாம் கும்பிட்டனர். விருந்துக்கு அழைத்தனர்.
நடக்கின்ற வழியில் ஒதுங்கி வழிவிட்டனர். இப்படி சகலவித உபசரிப்புகளும் நடந்துகொண்டே இருந்தன.
சிப்பாய் தூங்கியதும், ‘டீ’ மாஸ்டர் அவருடைய ராணுவ சீருடையைப் போட்டுக்கொண்டு, கையில் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு ஊருக்குள் நடந்தார்.
அவனுக்கும் அதே உபசரிப்பு கிடைத்தது. மனதிற்குள் பெருமகிழ்ச்சி.
அந்த ஊரில் மற்றொரு வில்லன் சிப்பாயைப்போல வேடமிட்டு ஊரை மிரட்டிக் கொண்டிருந்தான்.
வில்லனுக்கு இராணுவ சிப்பாயின் வரவு தெரியவே, அவனைச் சண்டையிட்டு கோழை என நிரூபித்து, அவமானப்படுத்த திட்டமிட்டுத் தேடிவந்தான்.
சிப்பாய் வேடமிட்டிருந்த ‘டீ’ மாஸ்டரை பார்த்தான். நாளை உனக்கும் எனக்கும் போட்டி நடத்தலாம். யார் வீரனென்று ஊர் அறியட்டும் என்றான்.
‘டீ’ மாஸ்டருக்கு பயத்தில் நடுக்கமே வந்துவிட்டது. தங்கியிருந்த இடத்திற்கு உடனே திரும்பினான்.
உண்மையான சிப்பாயை எழுப்பி, நடந்த உண்மையைச் சொன்னான். சிப்பாயும் அவனை மன்னித்துவிட்டுச் சொன்னான்.
நான் உன் தவறை மன்னித்துவிடுகிறேன். ஆனால் நீ அந்த வில்லனை சந்தித்தே ஆகவேண்டும். எப்போதும் நீ, நீயாக இரு!
உன்னுடைய திறமையெல்லாம் இயன்றவரை வெளிப்படுத்து. போலியாக எதையும் செய்யாதே.
அடுத்த நாள் வில்லனும் வந்தான். வில்லனைப் பார்த்ததும் ‘டீ’ மாஸ்டருக்குள் பயம் வந்துவிட்டது.
போட்டியைத் தொடங்கும் முன் இருவரும் ஒரு ‘டீ’ சாப்பிடுவோம் என்று சொல்லிவிட்டு டீயை போட ஆரம்பித்தான்.
நல்ல ருசியான, சூடான ‘டீ’யை வில்லனிடம் நீட்டினான்.
அதுவரை அவன் ‘டீ’ தயாரிக்க, பாய்லரை கொதிக்க வைத்தமுறை, ‘டீ’ யின் அளவை கலக்கிய வேகம், ஒரு சொட்டுகூட கீழே கொட்டாமல் கலந்த விதம்,
அதை ருசிக்கும்போது உண்டான திருப்தி போன்றவைகளை உணர்ந்த வில்லனுக்கு, மனதிற்குள் ஒரு கேள்வி?
ஒரு சாதாரண ‘டீ’ யை இந்த அளவு கவனத்துடன் செய்கின்ற இவன், சண்டையில் எவ்வளவு நுணுக்கங்களை அறிந்திருப்பானோ? என்று நினைத்தான்.
தன்னுடைய துப்பாக்கி மற்றும் ராணுவ உடைகளை ‘டீ’ மாஸ்டரின் காலடியில் வைத்து, தன்னை மன்னித்துவிடுமாறு வேண்டினான்.
தான் இந்த ஊரைவிட்டே வெளியேறுவதாகவும் உறுதி சொன்னான்.
மனச்சுமை இறங்கிய ‘டீ’ மாஸ்டர் வில்லனை மன்னித்தான்.
வில்லன் போனதும், ராணுவ சிப்பாயைப் பார்த்து, நான் நானாகச் செயல்பட வேண்டும் என்பதை உணர்த்தி, என்னையே எனக்கு அடையாளம் காட்டியமைக்கு நன்றி என்று கூறி வணங்கி நின்றார் ‘டீ’ மாஸ்டர்.
ஒரு மேதை சொன்னார், ‘மனிதனே! நீ ஒரு மரமாக இல்லையே என்று கவலைப்படாதே. ஒரு புதராக இரு! ஒரு புதராக இல்லாவிடில், ஒரு செடியாகவாவது இரு. ஒரு செடியாக இல்லாவிடில், ஒரு புல்லாகவாது இரு. புல்லாக இருந்து, பாதைகளை அலங்காரம் செய்தாலே, நீ மதிக்கப்படுவாய்.
அதுவே சிறப்பு! நீ நீயாக இரு. உழைப்பையே உயர்வாக நினை.
தகுதியைத் திறமையை வளர்த்துக்கொண்டே இரு. எல்லா வெற்றிகளும் உனக்கே வந்து சேரும்.
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
அழகான பதிவு ஆழமான கருத்து இறையருள் நல் வாழ்த்துக்கள் அண்ணா உங்களின் கனவுகள் யாவும் மெய்ப்பட வேண்டும் என்பது எங்கள் இறை பிராத்தனை ஆகும் மீண்டும் புரட்சி வாழ்த்துக்கள் அண்ணா
நாம் தமிழர்……
Seeman annaku ottu podunga nadu nalla erukkum ? pallavaram thogethi ?
சிறப்பு ☝️????
நாம் தமிழர்
நாம் தமிழர்
NTK ????
நாம் தமிழர் திருப்பூர் வடக்கு
?
Very very nice ?????
????????❤️❤️❤️❤️❤️!!!!
?
வணக்கம் அண்ணன் மிகவும் நன்றி. தாய்த்தமிழ் வாழ்க தலைவர் பிரபாகரன் (அண்ணன்கள்) வாழ்க